
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உடனடி நிவாரணம் தரக்கூடிய ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி விளம்பரப்படுத்தியிருந்த மருந்தைப் பெற மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மீறி முண்டியடித்துள்ள சம்பவம் இன்று கேகாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கேகாலையில், குறித்த மருந்தைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கும் தம்மிக பண்டாரவின் வீட்டை நோக்கியே இவ்வாறு மக்கள் படையெடுத்த நிலையில் சன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிசார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், இவ்வாறான ஒரு மருந்தால் எவ்வித பலனும் இருப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரம் எதுவுமில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத கொரோனா மருந்துக்கு மக்கள் முண்டியடிப்பு
Reviewed by Editor
on
December 08, 2020
Rating:
