(அலுவலக செய்தியாளர்)
உக்ரைன் நாட்டிலிருந்து 185 சுற்றுலா பயணிகளை ஏற்றிய விஷேட விமானம் ஒன்று இன்று (28) திங்கட்கிழமை நண்பகல் வேளையில் மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானத்திலேயே குறித்த பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.இந்த சுற்றுலா பயணிகள் 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
உக்ரைன் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு வருகை
Reviewed by Editor
on
December 28, 2020
Rating:
