ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்குமான அறிவித்தல்!



COVID-19 தொற்றுப் பரவல் அபாயம் காரணமாகத் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள வியாபாரிகளால் கூடுதல் விலைகளுக்கு மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக நாளாந்தம் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை அடுத்து, குறித்த வியாபாரிகள் தமது விற்பனைக்கான மரக்கறி வகைகளை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வர்த்தகர்களிடம் பெறப்பட்ட விலை விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விலைப்பட்டியல் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த விடயத்தைக் கவனத்திலெடுத்து, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆகக்கூடிய விற்பனை விலைகளுக்கு அதிகமாகக் குறிப்பிட்ட மரக்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் தங்களது கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் முறைப்பாடுகளைத் தெரியப்படுத்துமாறு, அல்லது 067 2277436 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


பிரதேச செயலகம்,
ஆலையடிவேம்பு.


ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்குமான அறிவித்தல்! ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்குமான அறிவித்தல்! Reviewed by Editor on December 04, 2020 Rating: 5