(றிஸ்வான் சாலிஹூ)
பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எல்.எம். சலீம் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அங்கீகாரத்தினை பாராளுமன்ற சபை நேற்று (03) வியாழக்கிழமை வழங்கியுள்ளது.
நிர்வாக சேவையிலிருந்து ஓய்வுபெற்ற இவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டாவது அதிகூடிய வாக்குகளை கட்சியின் சார்பில் பெற்றார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பட்டாளர், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர், அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஆகியவற்றின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளில் இவர் பணியாற்றியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நியமனத்திற்கு இவரின் பெயரை பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
