சம்மாந்துறையில் உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான தகவல்..!


கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்மாந்துறை நபரின் உடல் தொடர்ந்தும் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை IDH வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் கடந்த பல நாட்களாக தொடர்ந்தும் கல்முனை அஷ்ரஃப் கல்முனை வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மரண விசாரணையை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தப் பிராந்தியத்தில் தோன்றிய கொவிட் நெருக்கடி நிலைமைகளால் மரண விசாரணை காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

இந்த மரண விசாரணையை முன்னெடுக்கும்போது உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்கள் என உறுதிப்படுத்தப்படும் நபர்கள் பிரசன்னமாகியிருக்க வேண்டும். ஆனால் பிராந்தியத்தின் தற்போதைய கொவிட நிலைமைகளால் அவர்கள் அனைவராலும் முன்னிலையாக முடியாதுள்ளது.

எனவே, நிலைமைகள் சீரடைந்த பின்னர் குறித்த நபரின் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என அவர் அவர் தெரிவித்துள்ளார்.


நன்றி - மெட்ரோ

சம்மாந்துறையில் உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான தகவல்..! சம்மாந்துறையில் உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான தகவல்..! Reviewed by Editor on December 20, 2020 Rating: 5