தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா


(இர்பான் றிஸ்வான்)

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவாவை நியமிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவாவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பரிந்துரைத்தார்.

மேலும் பொலிஸ் ஆணைக்குழு, சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு ஆகியவற்றின் பெயர்களுக்கும் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா  தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா Reviewed by Editor on December 04, 2020 Rating: 5