கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை…!




கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார் என கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.ஏ.எல்.எப். ரஹ்மான்  இணையத்துக்குத் தெரிவித்தார். 

சம்மாந்துறையைச் நேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்தவராவார்.

இவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்று (10) இரவு முல்லேரியா IDH வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே உயிரிழ்ந்துள்ளார்.

முல்லேரியா IDH வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது இவர் உயிரிழந்த நிலையில், 

அவர் மரணமடைந்த பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சடலத்தை கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டபோதும் அந்த வைத்தியசாலைகள் சடலத்தை ஏற்றுக் கொள்ளாமை காரணமாக மீண்டும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கே கொண்டு வரப்பட்டது.

இதேவேளை, 

இந்த கொரோனா மரணம் தொடர்பில் சுகாதாரத்துறையினருக்கும் பிராந்திய சுகாதாரப் பிரிவினருக்கும் நாம் அறிவித்துள்ளோம். 

எனவே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.ஏ.எல்.எப். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

(Metro News)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை…! கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை…! Reviewed by Editor on December 11, 2020 Rating: 5