அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள் நாளை விடுவிக்கப்படலாம்!!!



(றிஸ்வான் சாலிஹூ)

நாளை (16) புதன்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதேச சபை, அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசசபைகளுக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிருந்து நிறைவுக்கு வரும் என்று அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் கெளரவ எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் நாளை (16) அக்கரைப்பற்றில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடலின் பின்னர், மாநகர சபையின் பெரும் பகுதிகள் தனிமைப்படுத்தல் வலயத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதோடு, சுகாதார பிரிவினரின் உத்தியோகபூர்வமான அறிவித்தல் வரும் வரை பொறுமை காக்குமாறும் மாநகர சபை உறுப்பினர் சபீஸ் பொதுமக்களை கேட்டுள்ளார்.


அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள் நாளை விடுவிக்கப்படலாம்!!! அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள் நாளை விடுவிக்கப்படலாம்!!! Reviewed by Editor on December 15, 2020 Rating: 5