(இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்)
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யக்கோரி இன்று (28) திங்கட்கிழமை காலை புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைதி பேரணியொன்று இடம் பெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பதாதைகளை ஏந்தியும், வெள்ளை துணிகளை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணப்பட்டதுடன், ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மகஜரொன்றும் கையொப்பமிடப்பட்டது.
ஜனாஸா எரிப்புக்கெதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்
Reviewed by Editor
on
December 28, 2020
Rating:
