(சர்ஜுன் லாபீர் )
ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை இன்று (28) திங்கட்கிழமை காலை 9.30 க்கு கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி சாய்ந்தமருது வரை சென்றடைந்தனர்.
கொரோனாவினால் மரணமடைகின்ற முஸ்லிம்களின் ஜனஸாக்களை அநியாயமாகவும், பலாத்காரமாக எரிக்காமல் நல்லடக்கம் செய்யக்கோரும் மகஜரினை கல்முனை பிரதேச செயலாளரிடம் கையளித்து விட்டு நடைபாதை ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தந்தையினதும் தனையனினதும் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
Reviewed by Editor
on
December 28, 2020
Rating:
