
பட்டதாரி பயிலுனர்களிடமிருந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்ற விருப்பம் கோரப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள் ஆகியவற்றை மேற்பார்வை செய்வதுடன், இஸ்லாமிய சமய, கலை, இலக்கிய, கலாசார செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பல்வேறு வகையில் பங்காற்றி வருகின்றது.
எனினும் பின்வரும் மாவட்டங்களில் திணைக்கள உத்தியோகத்தர்கள் எவரும் இன்மையால் திணைக்களத்தின் சேவைகளை செயற்றிறன் மிக்கதாக வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன.
கள - உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் காணப்படும் மாவட்டங்கள்:
1. மாத்தளை
2. பதுளை
3. மொனராகலை
4. கேகாலை
5. இரத்னபுரி
6. கம்பஹா
7. மன்னார்
8. அனுராதபுரம்
9. களுத்துறை
10. நுவரெலியா
11. யாழ்ப்பாணம்
12. கொழும்பு - (தலைமைக் காரியாலய உத்தியோகத்தர்களால் கள வேலைகள் கவனிக்கப்பட்டாலும் இம்மாவட்டத்தில் கள உத்தியோகத்தருக்கான வெற்றிடம் காணப்படுகிறது)
எனவே, அண்மையில் பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சியை முடித்த முஸ்லிம் பட்டதாரிகள் இம்மாவட்டங்களில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பினால் கீழ் காணப்படும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
1. பொது தொலைபேசி இல –0112667909
2. திரு.எஸ். மிரிஸியா தாஜூதீன் (A/O) –0761398596
3. திரு. எம்.ஆர்.எம். றாயிஸ் (D/O) -0775816861
4. திரு.ஏ.எம். பர்ஹான் (D/O) –0752752762
5. திரு.ஜே.எம். பிஸ்ருல் ஹாபி (D/O) –0764606323
மின்னஞ்சல் முகவரி – director@muslimaffairs.gov.lk
