
"கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிய சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையினை சேர்ந்த நபரொருவருக்கும், பொத்துவிலில் இருந்து சிகிச்சை பெற்ற நபரொருவரின் உறவினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் கருத்து தெரிவிக்கையில்,
இதனையடுத்து குறித்த நபர்களுடன் தொடர்புகொண்டிருந்த எமது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு இன்று (12) வியாழக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, எமது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவருக்கும், தாதியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து கொரோனா இற்காக சிகிச்சை அளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றாளாராக இனங்காணப்பட்ட வரை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எமது வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளார்கள் இனங்காணப்பட்டதை அடுத்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எமது வைத்தியசாலையின் தொழிநுட்ப குழுவின் கூட்டம் நாளை (11) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
December 10, 2020
Rating: