
நாளை (21) அதிகாலை 05 மணி முதல் வெல்லம்பிட்டிய சாலமுல்ல கிராம சேவையாளர் பிரிவு, வௌ்ளவத்தை, கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சஷேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்கனவே லொக்டவுனில் உள்ள ஏனைய அனைத்து பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலப்பிட்டிய – நைதூவ பகுதி, பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவு மற்றும் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம சேவையாளர் பிரிவு ஆகிய பகுதிகளும் தளர்த்தப்படவுள்ளது.
கம்பஹாவில் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் உள்ள ஏனைய அனைத்து பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Reviewed by Editor
on
December 20, 2020
Rating: