
(றிஸ்வான் சாலிஹூ)
2021ஆம் ஆண்டிற்கான அக்கரைப்பற்று மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்று (18) வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி அவர்களினால் இவ்வரவு செலவு அறிக்கையை சபையில் சமர்ப்பித்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 18பேரில் 17பேர் வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தும், ஒரு உறுப்பினர் மாத்திரம் எதிராக வாக்களித்தார்.
இன்று நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம் மூலம் எதிர்வரும் ஆண்டில் மாநகர சபை மூலம் அக்கரைப்பற்று மாநகரத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதோடு, இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய மற்றும் எதிராக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகர முதல்வர் அஹமட் ஸகி நன்றி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
