புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்

 


(றிஸ்வான் சாலிஹூ)

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பிரசன்னா ஷமல் சேனாரத் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிடம் இருந்து நேற்று (5) சனிக்கிழமை பெற்றுக் கொண்டார்.

இந்த நியமனத்திற்கு முன்பு இவர், ஐ.தே.கட்சியில் 17வருடங்கள் செயற்குழு உறுப்பினராக இருந்தவராவார்.

அகிலா விராஜ் கரியவாசம் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியதையடுத்தே இவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் Reviewed by Editor on December 06, 2020 Rating: 5