சூறாவளி (BUREVI) இலங்கையை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.



இன்று (01.12.2020)  காலை 05.30 மணிக்கு இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு:


தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும்  தாழமுக்கமானது (Depression) தற்போது (30.11.2020 இரவு 11.00 மணிக்கு செய்யப்பட்ட பகுப்பாய்வின்படி)

 திருகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 590 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுகிறது.


இது அடுத்து வரும் 06 மணித்தியாலத்தில் வலுவான தாழமுமாக (Deep Depression) உருமாறி, அதனை அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இது பின்னர்  மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும்  புதன்கிழமை 02ம் திகதி மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் இன்று (01.12.2020) காலை  வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு:


30.11.2020 இரவு 11.30 மணிக்கு செய்யப்பட்ட பகுப்பாய்வின் படி,


தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கம் (Depression) ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 07 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து தற்போது (30.11.2020 - 11.30pm) தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு அருகில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மேலாக காணப்படுகின்றது.


இது திருகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கு 590 கிலோமீற்றர் தூரத்திலும் கன்னியாகுமாரியில் இருந்து கிழக்காக 1000 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது. இது அடுத்து வரும் 06 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக (Deep Depression) ஆக வலுவடைந்து, அதனை அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) உருமாறும்.

 பின்னர் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் கரையோரத்தை முல்லைத்தீவு  (9.0N) இற்கும், மட்டக்களப்பு (7.5N) இற்கும் இடையில் எதிர்வரும் 2ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் (05.30pm - 11.30pm) ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கே.சூரியகுமாரன்

(ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி)

சூறாவளி (BUREVI) இலங்கையை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சூறாவளி (BUREVI) இலங்கையை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. Reviewed by Editor on December 01, 2020 Rating: 5