
(றிஸ்வான் சாலிஹூ)
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் இன்றைய (14) இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தம்புள்ளை அணியை எதிர்த்தாடிய ஐப்னா அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் துடுப்பாடிய ஐப்னா ஸ்டெலியன்ஸ் அணி 20ஓவர் முடிவில் 9விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றார்கள். இதில் சார்ள்ஸ் 56பந்துகளை எதிர் கொண்டு 76 ஓட்டங்களை சிறப்பாக பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை அணி சகல விக்கெட்களையும் இழந்து 19.1பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இந்த போட்டியில் தோல்வியடைந்தார்கள்.
எதிர்வரும் 16ஆம் திகதி ( புதன்கிழமை) மாலை 7.00மணிக்கு இடம்பெறவிருக்கும் லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஐப்னா ஸ்டெலியன்ஸ் அணியும் கோல் அணியும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
