
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய அவர்களின் தந்தையின் பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.
சனத் ஜயசூரியவின் தந்தை டன்ஸ்டன் ஜயசூரிய அவர்கள் தனது 80ஆவது வயதில் காலமானார்.
மாத்தறையில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்று டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியும், சனத் ஜயசூரிய உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது துயரத்தையும் பகிர்ந்து கொண்டார்.
ஜயசூரியவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் பிரதமர்
Reviewed by Editor
on
December 14, 2020
Rating:
Reviewed by Editor
on
December 14, 2020
Rating: