PCR பரிசோதனை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்



தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் பேரில் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. ஏற்கனவே சுகாதார வழிமுறைகளை தாங்கள் அனைவரும் பின்பற்றி நடந்தீர்கள். அதற்காக எமது நன்றிகளும் துஆக்களும் உரித்தாகட்டும். மேலும் இச்சந்தர்ப்பத்திலும் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும், சுகாதார அதிகரிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறும் முஸ்லிம் சமூகத்தினரிடம் மிக வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

குறிப்பாக பி.சி.ஆர். (PCR) பரிசோதனைகள் எந்தெந்த பகுதிகளில் இடம்பெறுகின்றதோ, அந்த நேரத்தில் அந்த பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறும், அதன் மூலம் கொவிட்-19 என்ற இக்கொடிய நோயின் தீங்கிலிருந்து தன்னையும் பிறரையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்திகொள்ளுமாறும் அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

PCR பரிசோதனை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல் PCR பரிசோதனை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல் Reviewed by Editor on December 13, 2020 Rating: 5