10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு



(றிஸ்வான் சாலிஹூ)

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சி மற்றும் பரிந்துரையின் கீழ் 10 பாடசாலைகள் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. 

அதனடிப்படையில் கீழ் குறிப்பிடும் பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளது.


01. நெடுந்தீவு மகா வித்தியாலயம்

02. வேலணை மத்திய கல்லூரி

03. ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி

04. காரைநகர் இந்துக் கல்லூரி

05. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி

06. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி

07. ஸ்கந்தவரோதயா கல்லூரி 

08. ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி – புத்தூர்

09. மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை

10. உடுத்துறை மகா வித்தியாலயம்

10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு Reviewed by Editor on January 20, 2021 Rating: 5