படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அம்பாரை ஊடக மையத்திலும் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.
சுகாதார விதி முறைகளிற்கு அமைய இடம்பெற்ற குறித்த நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் ,சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ரியாத் ஏ.மஜீத் ஊடகவியலாளர்கள், பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட மௌனன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் Reviewed by Sifnas Hamy on January 24, 2021 Rating: 5