இறக்காமம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் இறக்காமம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலும் இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மையவாடி சிரமதானம் செய்யப்பட்டது .
வருடா வருடம் இறக்காமம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல்,இறக்காமம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மையவாடி சிரமதானம் செய்யப்படுவது வழக்கமாய் இருந்தது வருகின்றது. கடந்த வருடம் கொரோனா நோய்காரணமாக இச்சிரமதானம் இடம்பெறாமையினால் மையவாடி பற்றைக்காடாக காட்சி அளித்ததை கருத்திற் கொண்டு இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிருவாகம் அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொண்டது.
கொரோனா நோய் அச்ச சூழ்நிலையிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இச்சிரமதானத்திற்க்கு வருமாறு ஜமாஆத்தார்களை அழைத்து பெரும் திரளான ஜமாஆத்தார்களின் பங்களிப்புடன் இந் சிரமதானம் இடம்பெற்றது.
இன்ற நிகழ்வின் ஒர் அங்கமாக இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளரினால் ஒரு தொகுதி மின்விளக்குகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மையவாடி சிரமதான நிகழ்வு - படங்கள்
Reviewed by Sifnas Hamy
on
January 24, 2021
Rating:
