அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் 19 பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!!

 

(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் நடாத்தப்படவுள்ள NVQ தரச் சான்றிதழுக்கான 19 தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தால் நாடு முழுவதிலுமுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக நடாத்தப்படுகின்ற NVQ தரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் இவ்வாண்டிற்காக (2021) 19 வகையான தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கத் தகைமையுள்ளவர்கள் தமக்கான விண்ணப்பப்படிவங்களை அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேரடியாக சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிகத் தகவல்களுக்கு தொழில்நுட்ப கல்லூரி மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை, அல்லது அந்த பிரிவி உத்தியோகத்தர்களை சந்திக்க முடியும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சகல பாடநெறிகளுக்குமான விண்ணப்ப முடிவுத் திகதி 29.01.2021 என்பதும் குறிப்பிடத்தக்கது.









அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் 19 பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!! அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் 19 பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!! Reviewed by Editor on January 08, 2021 Rating: 5