சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றி மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எனினும், மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
வகுப்புக்களில் 50 வீதமான ஆசனங்களில் மாத்திரம் அமரக்கூடிய வகையில் மேலதிக வகுப்புக்களை நடத்தவேண்டும் என்பதோடு 100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளுக்கு அனுமதி...
Reviewed by Editor
on
January 17, 2021
Rating: