
கொவிட்-19 தொற்று காரணமாக கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், காத்தான்குடியில் 25 பாடசாலைகளும், கல்முனையில் 05, திருக்கோவில் -01, அம்பாறையில்- 01 பாடசாலையும் என மொத்தமாக 32 பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (10) நடைபெற்ற மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருடனான கலந்துரையாடலின் போதே இந்த எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் 32 பாடசாலைகள் நாளை திறக்கப்படாது - ஆளுநர் அறிவிப்பு
Reviewed by Editor
on
January 10, 2021
Rating:
