
Nation leaders foundation தலைவரும் சமூக ஆர்வலருமாகிய திரு.ஜெகநாதன் கிஷான் அவர்கள் இன்று (27) புதன்கிழமை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர இளைஞர் அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஜனாப். சப்ராஸ் மன்ஸூர் அவர்களை சினேகபூர்வ அடிப்படையிலான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
சந்திப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கு இடையிலான பிரிவினைவாதத்தை துடைப்பதற்கு தேசிய காங்கிரஸ் தலைவரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் அத்துடன் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை ஏற்படுத்துமுகமாக கல்முனை மாநகரசபைக்குற்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களை பாதிக்காதவாறு பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி சபைகளை வழங்குவதற்கு ஒரு சிறந்த தீர்வை தருவதற்கான ஒரு முன்மொழிவை முன்வைத்தார் திரு. கிஷான் முன்வைத்தார்.
இதனை சப்ராஸ் மன்சூர் அவர்கள் ஏற்றுக் கொண்டதோடு தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவிடம் இது சம்பந்தமாக பேசுவதாகவும் இணக்கப்பாட்டுக்கு வந்து இந்த விடயத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்ற விடயமும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
அரசியல் ரீதியாக பிரித்தாளும் தந்திரங்களை கையாளுகின்ற சில தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் சம்பந்தமான விடயத்தை கையாள முடியவில்லை என்றும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
