சிறந்த பெண் தொழில்வல்லுநராக வயம்ப பிரின்ட் பெக் நிறுவனத்தின் பிரதம நிதிப் பொறுப்பாளரான சிபாரா பாரூக் இஸ்மாயில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா எயிட், உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் Women in Management ஆகியன இணைந்து இலங்கையிலுள்ள சிறந்த 50 பெண் தொழில் வல்லுநர்களுக்கு வருடாந்தம் விருது வழங்கி கௌரவிக்கின்றது.
பத்தாவது தடவையாக நேற்று (26) செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்விலேயே சிபாரா பாரூக் இஸ்மாயிலுக்கு இந்த விருது கிடைக்கப் பெற்றது.
தனியார் தொழிற்துறைக்கு தலைமை தாங்கல் எனும் பிரிவிலேயே இவருக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் மாத்திரமே முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிபாரா சிறந்த தொழில் வல்லுநராக தெரிவு
Reviewed by Editor
on
January 28, 2021
Rating:
