(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லாவின் “நிதி முகாமைத்துவம்“ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.
இந் நூலானது சகல அரசாங்க உத்தியோகத்தர்களின் வினைத்திறன்காண் தடைப் பரீட்சை, இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சை ,இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை , இலங்கை கணக்காய்வு சேவை போட்டிப் பரீட்சை,கணக்காய்வு பரிசோதகர் போட்டிப் பரீட்சைகள் என பல வகையான பரீட்சைகளுக்கும் இந் நூல் பிரயோசனமாக அமைகின்றது.
இந் நிகழ்வில் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முஹ்ரப், மருதமுனை- நற்பிட்டிமுனை சமூர்த்தி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம் முபீன்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களான எம்.எம் ஹசன்,யூ.எல் ரமீஸ்,நிதி உதவியாளர் என்.ஐ.ஏ ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கணக்காளர் ஹபிபுல்லாவின் "நிதி முகாமைத்துவம்" நூல் வெளியீடு..
Reviewed by Editor
on
January 16, 2021
Rating:
