மாநகர முதல்வர் தலைமையில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்



(றிஸ்வான் சாலிஹூ)

மிக நீண்ட கால தேவையாகவும், அத்தியவசிய செயற்பாடகவுமிருந்த அக்கரைப்பற்று காதர் ஓடாவியார் வீதியினை செப்பனிடும் பணிகள் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தலைமையில் இன்று (28) வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர், வட்டார பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

எம் மண்ணின் அபிவிருத்தி திட்டங்கள் யாவும் எமது மக்களின் பொறுமையினாலும் எமது தூர நோக்கான சிந்தனையின் மீது கொண்ட நம்பிக்கையினாலும்  சாத்தியமானது என்பதினை நாம் அனைவரும் அறிவோம். பொறுமைக்கான கூலியை வல்ல நாயகன் அல்லாஹூத்தஆலாவே தருகிறான் எனும் அடிப்படையில் எமக்கான அபிவிருத்தி திட்டங்கள் மிக நேர்த்தியாகவே நடைபெற்றிருக்கின்றன என்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் காதர் ஓடாவியார் வீதியும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. எமது பொறுமைக்கான கூலியும் கைகூடியிருக்கிறது. எனினும், இன்னும் செப்பனிடப்பட வேண்டிய பாதைகள் மற்றும்  திட்டவரைபுகளின் மீதும் நாம் அதிக கவனத்தினை செலுத்தியுள்ளோம். அதற்கான முயற்சிகளையும் தொடரேட்சியாக செய்து வருகிறோம். 

எமது  மக்களுக்கான பணிகளில் தூர நோக்குடன் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தினையும், வாய்ப்பினையும் இறைவன் தர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாநகர முதல்வர் தலைமையில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம் மாநகர முதல்வர் தலைமையில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம் Reviewed by Editor on January 28, 2021 Rating: 5