புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளில் அதிருப்தி அடைந்த மாணவர்களுக்கு சந்தர்ப்பம்


புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை, தேசியப் பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான மேன் முறையீடுகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா  தெரிவித்துள்ளார்.

எனினும், online முறைமை ஊடாக மாத்திரமே இம்முறை மேன்முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி,  http://g6application.moe.gov.lk/ இணையத்தள முகவரியின் ஊடாக இந்த நடவடிக்கைளை மேற்கொள்ள முடியும் என, கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். 

(மினுவாங்கொடை நிருபர்) 

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளில் அதிருப்தி அடைந்த மாணவர்களுக்கு சந்தர்ப்பம் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளில் அதிருப்தி அடைந்த மாணவர்களுக்கு சந்தர்ப்பம் Reviewed by Sifnas Hamy on January 21, 2021 Rating: 5