இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு

 

(எம்.எம்.ஜபீர்)

நாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின்  2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு  நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ராதின்ந் தலைமையில் மத்திய முகாம் றாணமடு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நேற்று (20) புதன்கிழமை  நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா,  நாவிதன்வெளி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.ருவுதரன்,  கல்முனை  இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ரீ.மோகன்ராஜ், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.சுதன், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது நாவிதன்வெளி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய 

தலைவராக எஸ்.மயூரன், 

பிரதிதலைவராக ரீ.நிதர்சன் ,

பொருளாளராக எஸ்.பிறேம்குமார்,

அமைப்பாளராக பீ.தர்சன்,

பிரதி அமைப்பாளராக எஸ்.தனுஸ்காந்தன்,

உபசெயலாளராக எம்.எம்.ஜஹான் 

மற்றும் துறைசார் பிரிவு செயலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு Reviewed by Admin Ceylon East on January 21, 2021 Rating: 5