(சர்ஜுன் லாபீர்)
கடந்த நான்கு ஆண்டுகளாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி காரைதீவு பிரதேசத்தின் பல்வேறுபட்ட சுகாதார நடவடிக்கைகளில் வெற்றி கண்டு வாகை சூடிய டாக்டர் றிஸ்னியினை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இன்று (6)புதன்கிழமை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவா சுப்ரமணியம் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணனின் விசேட பணிப்புரையின் கீழ் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 4 மாத காலமாக விசேட சேவையாற்ற பணிக்கப்பட்டதற்கிணங்க கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி கல்முனை பிரதேசத்தில் கொரோனாவினை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு அரும்பாடுபட்டதோடு பல்வேறுபட்ட சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றியதோடு டெங்கு ஒழிப்பு செயற்பாட்டினையும் வெற்றிகரமாக கையாண்டமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
எனது சேவையை நேசிக்கும் இந்த மக்களுக்கு நான் முழு மனதுடன் கடமையாற்ற உறுதி பூண்டுள்ளேன் எனவும் எதிர்வரும் காலங்களில் மிக விரைவில் தான் பிறந்த மண்ணான கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு நிரந்தர நியமனம் பெற்று வந்து நீண்ட காலத்துக்கு மேலும் பல விஷேட சேவைகளை செய்ய உறுதிமொழி கொண்டுள்ளதாக டாக்டர் ரிஸ்னி அங்கு விசேட உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டு இருந்தார்.
டாக்டர் றிஸ்னி கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இருந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நிரந்தர நியமனம் பெற்றுச் செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டாக்டர் றிஸ்னி அவர்களின் இப்படியான மிகச்சிறந்த மருத்துவ சேவை அவர் நிரந்தரமான நியமனம் பெற்றுச் செல்லும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தனது உன்னதமான மக்கள் சேவையினை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவார் என்பது மக்களின் எதிர்பர்ப்பாகும்.
டாக்டர் றிஸ்னியின் உன்னத சேவைக்கு பாராட்டும், பிரியாவிடை நிகழ்வும்.
Reviewed by Editor
on
January 06, 2021
Rating:
Reviewed by Editor
on
January 06, 2021
Rating:


