டொக்டர் ஜெயசங்கர் மற்றும் டக்ளஸ் தேவானந்தாக்கிடையில் விசேட சந்திப்பு


(அலுவலக செய்தியாளர்)

இந்திய வெளி விவகார அமைச்சர் டொக்டர் ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இன்று (06) புதன்கிழமை மாலை கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.


இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் விசேட சந்திப்பை அவர் நடாத்தினார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய வெளி விவகார அமைச்சரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
டொக்டர் ஜெயசங்கர் மற்றும் டக்ளஸ் தேவானந்தாக்கிடையில் விசேட சந்திப்பு டொக்டர் ஜெயசங்கர் மற்றும் டக்ளஸ் தேவானந்தாக்கிடையில் விசேட சந்திப்பு Reviewed by Editor on January 06, 2021 Rating: 5