சாகாமம் செல்ல பொதுமக்களுக்கு தடை!!


(றிஸ்வான் சாலிஹூ)

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட சாகாமம் குளத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு கொவிட் 19 தடுப்பு குழுவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


திடீர் சுற்றுலாத் தளமாக மாறிய சாகாமம் குளத்திற்கு பொதுமக்கள் கடந்த சில நாட்களாக படையெடுக்க தொடங்கியதை தொடர்ந்து, இன்று (06) புதன்கிழமை காலை திருக்கோவில் பிரதேச கொவிட்19 தடுப்பு குழுவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


விசேட அதிரடிப் படையினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகாமம் செல்ல பொதுமக்களுக்கு தடை!!  சாகாமம் செல்ல பொதுமக்களுக்கு தடை!! Reviewed by Editor on January 06, 2021 Rating: 5