(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையைத் தொடர்ந்து அக்கரைப்பற்றில் மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்களை மீண்டும் திறப்பது தொடர்பில் நேற்று (05) செவ்வாய்க்கிழமை அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தினால் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூஸா நக்பர் அவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (06) இடம்பெறுகின்ற உயர்மட்ட அதிகாரிகளினூடான சந்திப்பின் பின்னர் பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை பெற்றுத்தருவதாக வைத்திய அதிகாரி பரூஸா நக்பர் உறுதியளித்ததாக அக்கரைப்பற்று பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை தேசிய காங்கிரஸின் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் எமது இணையத்தள செய்திக்கு தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம், இன்று நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் அனைத்துப்பள்ளிகளையும் நாளை (07) வியாழக்கிழமை மீள் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக பள்ளிவாசல்களில் 25 பேர் மாத்திரமே கூட்டு ஐந்து வேளை தொழுகையில் ஈடுபட முடியும் என்பதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக மாநகர சபை தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
January 06, 2021
Rating:
