இவ்வாண்டுக்கான (2021) முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எம். உமாமகள் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (26) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதேசவாரியாக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன. சுகாதாரம் , RDA,RDD மற்றும் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகள் சம்பந்தமாகவும் கல்வி, மீன்பிடி, நீர்பாசனம், சட்டவிரோத கிரவல் மற்றும் மண் அகழ்வு சம்பந்தமாகவும் அத்துடன் வடிகாலமைப்பு, விவசாயம், வனஜீவராசிகள், NHDA (தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை) வீட்டுத்திட்டம் சம்பந்தமாகவும், கால்நடை, மின் இணைப்பு, நில அளவை திணைக்களம் உட்பட்ட அது சார்ந்த பிரச்சனைகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
மக்களின் தொடர் பிரச்சினையாக உருவெடுத்துள்ள காணி சம்பந்தமான விடயங்களுடன் இணைந்த பொது அமைப்புக்களின் பல்வேறு பிரச்சினைகளும் இங்கே கவனத்திற் கொள்ளப்பட்டது.
குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திரு. செல்வம் அடைக்கலநாதன், கௌரவ திரு.வினோ நோகரதலிங்கம் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள் , திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
