"நீரின்றி அமையாது உலகு" என்கின்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் கௌரவ நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் பங்களிப்புடன் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட “பிரஜா ஜல அபிமானி” என்கின்ற நாடு பூராகவும் ஆயிரம் கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக எம்மால் கொண்டுவரப்பட்ட வவுனதீவு, காஞ்சிரங்குடா பிரதேசத்திற்கான பாதுகாப்பான குடிநீர் வசதி திட்டத்தினை இன்று (25) ஆரம்பித்து வைத்ததுள்ளோம்.
இதுபோன்று எதிர்வரும் காலங்களில் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இந்த குடிநீர் விநியோகத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதற்க்கான திட்டமுன்மொழிவினை கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்காரஅவர்களிடமும் கௌரவ பிரதமர் அவர்களிடமும் சமர்ப்பித்துள்ளோம்.
காஞ்சிரங்குடா பிரதேசத்துக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம்...
Reviewed by Editor
on
January 25, 2021
Rating:
