கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்த வசதி!!!


அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கு இணைய வழி ஊடாக கட்டணங்களைச் செலுத்த முடியும்.

இதற்காக 3 வழிமுறைகளை அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக துறைமுகத்தில் உள்ள தமது பொருட்களை வீடுகளில் அல்லது அலுவலகங்களில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும் என்று அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வழிமுறையின் மூலம் மிக இலகுவாக தமது பொருட்களை பெற்றக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

எனவே பொது மக்கள் விரைவாக பொருட்களை துறைமுகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

(News.lk)


கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்த வசதி!!! கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்த வசதி!!! Reviewed by Editor on January 25, 2021 Rating: 5