
(ஸப்னாஸ் ஸறூக்)
நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரம் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் என்ற கருத்தில் மாற்றம் இல்லை என இன்று (07) வியாழக்கிழமை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள் வைரஸ் தொடர்பான நிபுணர் குழு சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்ற பரிந்துரை உடனான அறிக்கையை முன் வைத்துள்ளது. ஆனால் நீங்கள் எதன் அடிப்படையில் இவ்வாறான கருத்தை முன் வைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,
மெத்திகா உள்ளடக்கிய நிபுணர் குழுவின் முடிவின் படியே எரிப்பு என்றும் , அதுவே பிரதான நிபுணர் குழு என்றும் வைரஸ் தொடர்பான நிபுணர் குழு பிராதான குழு அல்ல அது ஆலோசனைக்காக உருவாக்கப்பட்ட உப குழு என்றும் கூறினார்.
உடனடியாக எழுந்த கஜேந்திர குமார், அப்படியாயின் குறித்த விடயத்தில் நிபுணத்துவம் வாய்ந்த வைரஸ் நிபுணர் குழுவின் பரிந்துரையை புறக்கணித்து விட்டா இவ்வாறான முடிவு என கேள்வி எழுப்பினார்.
மீண்டும் பதிலளித்த அமைச்சர் பவித்ரா பிரதான குழு இதுவரை எந்த தீர்மாணத்தையும் தர வில்லை, உபகுழுவின் அறிக்கையினை அவர்கள் ஆராய்கிறார்கள் என்றார். அவர்களின் முடிவின் பிரகாரம் தீர்மானத்தை அறிவிப்பதாக கூறினார்.
உடனே கஜேந்திர குமார் தன் கேள்விக்கு இது விடை இல்லை எனவும், எப்போது இறுதி முடிவு வரும் என ஒரு கால எல்லையை கூறுமாறும் கூறினார்.
எனினும் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் சபாநாயகரின் குறுக்கீட்டால் பதில் கிடைக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
January 07, 2021
Rating: