(றிஸ்வான் சாலிஹூ)
183 சுற்றுலாப் பயணிகளுடன் உக்ரைன் ஏர்லைன்ஸ் (பிஎஸ் 6385 2021) இன்று (07) வியாழக்கிழமை 12.03 மணிக்கு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை புதுப்பிக்க அரசாங்கத்தின் "பைலட் செயற் திட்டத்தின்" கீழ் இலங்கைக்கு வந்த உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் 5 வது குழு இதுவாகும். விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக சுகாதார அதிகாரிகளின் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் 5ஆவது குழு இலங்கைக்கு வருகை
Reviewed by Editor
on
January 07, 2021
Rating:
