மட்டக்களப்பு நகர் பகுதிகளில் அதிகபட்ச மழை வீழ்ச்சி...

கடந்த 8 மணித்தியாலங்களில் மயிலம்பாவெளியில் 218 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு நகரத்தில் 118.1 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும்  கிடைக்கப்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தெரிவித்தார். 


கடந்த 8 மணித்தியாலங்களில் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8 மணித்தியாலங்களில் நவகிரி 8.1 மில்லிமீட்டர், தும்பங்கேணி 52.7 மில்லிமீட்டர், உன்னிச்சை 23 மில்லிமீட்டர், வாகனேரி 88.3 மில்லிமீட்டர், கட்டுமுறிவு 11 மில்லிமீட்டர், றூகம் 43 மில்லிமீட்டர், கிரான் 88.2 மில்லிமீட்டர், பாசிக்குடா 80 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சிகள் கிடைக்கப்பெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய கடமைப்பொறுப்பாளர் தெரிவித்தார். 


நீரேந்து பிரதேசங்களை அண்டிய பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


(மாவட்ட ஊடகப் பிரிவு)

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் அதிகபட்ச மழை வீழ்ச்சி... மட்டக்களப்பு நகர் பகுதிகளில் அதிகபட்ச மழை வீழ்ச்சி... Reviewed by Editor on January 29, 2021 Rating: 5