(றிஸ்வான் சாலிஹூ)
2020ம் ஆண்டின் புலமைப்பரிசில் பரிசில் பரீட்சையில் சிறந்த அடைவுகளைப் பெற்ற அக்கரைப்பற்று அக்/ சம்சுல் உலும் வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
2020ம் ஆண்டின் புலமைப்பரிசில் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 168 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு கௌரவத்தை ஏற்படுத்தி தந்த மாணவன் எஸ்.றீகான் அகமட் மற்றும் வெட்டுப் புள்ளிகளை அண்மித்து இப்பரீட்சையில் சிறந்த அடைவுகளைப் பெற்ற மாணவர்களும் இதற்கு ஊன்று கோலாக அமைந்த பாடசாலையின் ஆசிரியர் எம்.எம்.றிஸ்வின் ஆசிரியர் அவர்களும் அக்கரைப்பற்று மக்கள் வங்கி கிளையினால் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.சமீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் எம்.பீ.எம். அன்வர் பிரதம விருந்தினராகவும், கல்லூரியின் PSI இணைப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம்.எம்.ஜஃபர் அவர்களும், ஆண்கள் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.எம்.செயினுடீன் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்!!!
Reviewed by Editor
on
January 29, 2021
Rating:
Reviewed by Editor
on
January 29, 2021
Rating:




