முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் இலங்கை வாழ் முஸ்லிம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வருடாந்தம் மேற்கொண்டுவரும் புத்தக கொள்வனவு செய்யும் பணியினை இவ்வருடமும் மேற்கொள்ள உள்ளது என்பதை முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு திணைக்களம் அறியத் தருகின்றது.
எனவே எழுத்தாளர்கள் இதுவரை திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்படாத புத்தகங்களின் மாதிரியையும் வேண்டுகோளையும் கொள்வனவுக்காக திணைக்களத்திற்கு 2020 ஜனவரி 15 க்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு திணைக்களத்துக்கு கொள்வனவிற்காக சமர்ப்பிக்கப்படும் புத்தகங்களை திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசிக்கமைய குறிப்பிட்ட தொகைப்புத்தகங்களை 20% கழிவுடன் திணைக்களம் கொள்வனவு செய்யும் என்பதனை அறியத்தருகிறோம் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Reviewed by Editor
on
January 06, 2021
Rating:
