
(ஏறாவூர் நஸீர்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்றிரவு (19) தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலையில் இடம்பெற்றுள்ளது.
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ள தனது மனைவியோடு, தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட கருத்து முரன்பாடு காரணமாக தனது இரு பெண் மக்களையும் (15, 12) தவிக்க விட்டு தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிள்ளைகள் இருவரும் சித்தியின் பராமரிப்பில் இருந்ததால், தனது பிள்ளைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய தாய் , "அப்பா தூக்கிடப் போவதாக கடிதமொன்றை எழுதி அனுப்பிவிட்டு Phone ஐ Off பண்ணிவிட்டார் " வீட்டுக்கு போய் பாருங்கள் என்று இன்று (21) காலை பதட்டத்தோடு தெரிவித்ததும், உடனடியாக சென்று பார்த்தபோது, அப்பா வீட்டு வளையில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்திருப்பதை கண்டுள்ளார்கள் அந்த பிள்ளைகள்.
Reviewed by Editor
on
January 20, 2021
Rating: