பிரார்த்தனைகளுடன் விடைபெற்ற நமது உறவுகள்!!

 

கடந்த 2020 டிசம்பர் 30ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen Test யின் போது கொறோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் கறடியனாறு வைத்தியசாலயில் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 47 சகோதரர்கள் தங்களுடைய சிகிச்சையை பூரணமாக நிறைவு செய்து இன்று (13) புதன்கிழமை காலை சுக தேகியாக  வீடு சென்றடைந்தார்கள்.

இவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்துச்செல்வதற்கு வாகண ஒழுங்குகளை ஏற்பாடு செய்தவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் வைத்தியசாலையில் பல வகையான சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் பொறுமையாகவும், கூட்டுப் பொறுப்புணர்வுடனும், சகோதரத்துவத்துடன் மிக அன்பாக எல்லோரும் இணைந்து செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அனைவரும் இளைஞர்களாக இருந்தாலும் தொழுகையின் போதான ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

வைத்தியசாலையின் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதிலும் , சுகாதாரத்தை பேணுவதிலும் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டார்கள்.

அத்தோடு புதிதாக ஒருவர் அனுமதிக்கப்படும் போது அவரை அன்பாக வரவேற்று தேவையான அனைத்து விடயங்களையும் முன்னின்று செய்துகொடுத்தமையானது சகோதரத்துவத்திற்கும் இன ஐக்கியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தேனீர் ஊற்றுவதிலிருந்து , உணவு வினியோகம் வரை ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக செயற்பட்டார்கள்...

இறுதியாக சொல்லப்போனால் எமது சகோதரர்கள் அனைவரும் இங்குள்ள அனைவரினதும் மனங்களை வென்றவர்களாகவே விடை பெற்றார்கள்.

இளைஞர்களின் இந்த  மாற்றத்தில் மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேசனின் பங்கு அளப்பரியது என்று நினைக்கின்றேன். திட்டமிட்ட செயற்பாடுகளும் , வேலைத்திட்டங்களும் ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தின் உருவாக்கத்திற்கு வித்திட்டுள்ளது என்பதை உறுதியாக கூறமுடியும்.

எனவே எமது சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.


(AG. Muhammad Shamil

பிரார்த்தனைகளுடன் விடைபெற்ற நமது உறவுகள்!! பிரார்த்தனைகளுடன் விடைபெற்ற நமது உறவுகள்!! Reviewed by Editor on January 13, 2021 Rating: 5