அக்கரைப்பற்றவர்கள் கலந்து கொண்ட ஜனாஸா எரிப்பு போராட்டம்



(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கையில் மிலேச்சத்தனமாக கொரோனா தொற்றினால் மரணித்த உடல்களை எரிப்பதனை எதிர்த்து இன்று (10) ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.


இலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வபா முஸ்தபா அவர்களின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வாகன ஆர்ப்பாட்ட பேரணியில் இலங்கையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் கடந்து வாழ்ந்தாலும் முஸ்லிம் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்தக் கோரி இவர்கள் ஏற்பாடு செய்த இந்த வாகன பேரணியானது பலரின் கவனத்தையும் ஈர்ந்துள்ளதோடு, இவர்களின் இந்த ஏற்பாட்டுக்கு பலரும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.





அக்கரைப்பற்றவர்கள் கலந்து கொண்ட ஜனாஸா எரிப்பு போராட்டம் அக்கரைப்பற்றவர்கள் கலந்து கொண்ட ஜனாஸா எரிப்பு போராட்டம் Reviewed by Editor on January 10, 2021 Rating: 5