சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இலங்கையர் கைது.


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, மாலைதீவு மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய

நாடுகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பங்கீட்டின் முக்கிய கர்த்தாக்கள் எனக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை ஒரு பெரும் நடவடிக்கை மேற்கொண்டு இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்(NCB) கைது செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட எம்.எம்.எம்.நவாஸ் மற்றும் முஹமட் அஃப்னாஸ் ஆகியோரே சென்னையிலிருந்து இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறித்த இருவரும் நடுக்கடலில் பாகிஸ்தானிய மற்றும் ஈரானிய கப்பல்களிலிருந்து போதைப்பொருள் விநியோகம் மற்றும் கொள்வனவை தமது கட்டுப்பாட்டில் மேற்கொண்டு வந்துள்ளனர் என நிறுவனத்தின் பேச்சாளரான கே.பி.எஸ்.மல்ஹோத்ரா கூறுகிறார்.
நவாஸ் மற்றும் அஃப்னாஸ் ஆகிய இருவரும் பன்னாட்டு ஹெரோயின் கடத்தலில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.
இதேவேளை நவாஸ் என்பவருக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இன்ரபோலின் சிவப்பு அறிக்கை ஒன்றும் உள்ளதாக நம்பப்படுகிறது என மல்ஹோத்ரா மேலும் தெரிவித்தார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இலங்கையர் கைது. சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இலங்கையர் கைது. Reviewed by Sifnas Hamy on January 23, 2021 Rating: 5