புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமாணம்!!!



(றிஸ்வான் சாலிஹூ)

2021ஆம் புதிய ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் ஆரம்ப தினமாகிய இன்றை நாளில் அரச ஊழியர்கள் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (01) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிவமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில், பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.



"ஒரே நாட்டில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும், சமத்துவத்துடனும், ஒருமித்த மனதுடன், சகோதர மனப்பான்மையுடன் பொதுமக்களுடன் அன்பாக பழகுவதுடன், சேவை நாடி வருகின்ற பொதுமக்களுக்கு தாமதம் ஏற்படாமல் அவர்களுடைய தேவைகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என்று ஊழியர்கள் அனைவரும் உறுதியுரை எடுத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.


இந்நிகழ்வில் பிராந்திய முகாமையாளர், பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போராடி உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.











புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமாணம்!!! புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமாணம்!!! Reviewed by Editor on January 01, 2021 Rating: 5