உறுதியான மனதுடன் புதிய வருடத்தில் காற் பதிப்போம் - சஜித் பிரமேதாஸ

 

நாம் புது வருடத்துக்கு பிரவேசிப்பது அண்மை காலத்தில் உலகம் முகம் கொடுத்த மிக மோசமான தொற்றுநோய்க்கு இன்னும் உறுதி வாய்ந்த முடிவு கிட்டாத பின்னணியிலாகும்.கோரோனா தொற்றுநோய்க்கு முன்னால் முழு உலகமே முன்னொரு போதும் இல்லாத அராஜக நிலைக்கு தல்லப்பட்டுள்ளது மட்டுமல்ல சுகாதார,பொருளாதார,அரசியல் மற்றும் சமூகவியல் சிக்கல்களுக்கு மத்தியில் ஒரு உறுதியற்ற நிலையில் புதிய வருடத்தில் காற்பதிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாஸ தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் வாழ்த்து செய்தியில்,
எது எப்படி இருந்த போதிலும் மானுட வரலாற்றில் இது வரை காலமும் அதன் பரிணாமம் எல்லையில்லா சவால்களுக்கு மத்தியில் நிலைக்குலையாது உறுதியான மனதோடு ஆத்மவிஷ்வாசத்துடன் தோல்வியை வெற்றி கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை கொண்ட முற்போக்கு மனிதர்களது செயற்பாடு என்பது நாம் கண்ட உண்மை.
உதயமாகும் புது வருடத்தில் பிரதான சவாலாக அமைவது கோரோன எனும் உலக தொற்றுநோயை வெற்றி கொள்வதாகும். இந்த சவாலை வெற்றி கொள்ள இன,மத,குலம் கோத்திர வேற்றுமைக்கு அப்பால் நாடுகள் என்று பிரிந்து செயற்பட முடியாது. முழு உலகும் முன்னொருபோதும் காணப்படாத அளவு ஒற்றுமையோடும் நல்லெண்னத்தோடும் செயற்படவேண்டும். "இயற்கையோடு ஒன்றிப்பது' என்பது இதற்கான நல்ல தீர்வாக அமையும்.
ஒரு நாடு என்ற வகையில் எமது தாய் நாடு பல கடும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. ஒரு பக்கம் கோரோனா தொற்று இன்னொரு பக்கம் குறுகிய அரசியல் இலாபத்தை அடிப்படையாகக்கொண்டு மக்கள் மிக மோசமாக குழம்பிப்போய்யுள்ளனர்.
உதயமான புதுவருடம் திட உறுதி , மனித நேயம், அர்ப்பணிப்பு மற்றும் நல்லெண்னத்துடன் கூடி வெற்றி கொள்ளப்படவேண்டியுள்ளது.இதற்கு எனது அன்பான முழு இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் சக்தி, உறுதி, திடகாதிரம் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்


உறுதியான மனதுடன் புதிய வருடத்தில் காற் பதிப்போம் - சஜித் பிரமேதாஸ உறுதியான மனதுடன் புதிய வருடத்தில் காற் பதிப்போம் - சஜித் பிரமேதாஸ Reviewed by Editor on January 01, 2021 Rating: 5