காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதியில் கடும் வெள்ளம்!!! (வீடியோ)


(றிஸ்வான் சாலிஹூ) 

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வருகின்றது.

அதனடிப்படையில் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, கல்லடி மற்றும் நாவற்குடா பிரதேசங்களில் கடும் மழை காரணமாக வீதிகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கி வருவதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்.

இதற்கிடையில் தனிமைப்படுத்தப்பட்டு ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் முற்றாக மூழ்கி உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.













காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதியில் கடும் வெள்ளம்!!! (வீடியோ) காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதியில் கடும் வெள்ளம்!!! (வீடியோ) Reviewed by Editor on January 04, 2021 Rating: 5